அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய அதிமுக மனுவுக்கு சசிகலா பதிலளிக்க உத்தரவு

0 4011
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை நிராகரிக்கக் கோரும் மனுவுக்குப் பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராகத் தினகரனையும் அதிமுகவினர் தேர்ந்தெடுத்தனர்.

சசிகலாவும், தினகரனும் அதிமுக நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என 2017ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தப் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடுத்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தொடுத்த வழக்கை நிராக்கக் கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஏப்ரல் 23ஆம் நாளுக்குத் தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments