ஸ்டெர்லைட் ஆலை அருகே ஏற்றுமதிப் பொருள் கிடங்கில் தீவிபத்து

0 2127
ஸ்டெர்லைட் ஆலை அருகே ஏற்றுமதிப் பொருள் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள சிகால் (SICAL) நிறுவன குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அந்த குடோனில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தினர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆயத்த ஆடைகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகலில் குடோனின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி, காற்றின் வேகத்தில் மளமளவென தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, வீரர்கள் போராடி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments