கொரோனாவை தடுக்க நடவடிக்கை பலன் இல்லாவிட்டால் இரவு ஊரடங்கு..! தமிழக அரசு அறிவிப்பு..

0 112525
தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க நேரிடும் என அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த முயற்சியில் பலன் கிடைக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனும் பங்கேற்றார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், நோய் தொற்று பகுதியில் கடும் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக சென்னையில் 15 களப்பணி குழுக்களும், மாவட்டங்கள் தோறும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஒரு கால வரையறைக்குள் முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வருகிற 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுமென கூறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முயற்சியில் பலன் கிடைக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments