கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்துத் தாகந்தீர்க்க அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோள்

0 868
கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கவும், கொரோனா பரவலைத் தடுக்கக் கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

கோடைக்காலத்தில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கவும், கொரோனா பரவலைத் தடுக்கக் கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் வழங்கவும் அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டுத் தண்ணீர்ப் பந்தல்களை அமைத்துத் தாகத்தைத் தணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தண்ணீர்ப் பந்தல்களைக் காலையில் ஒரு முறையும், பிற்பகலில் ஒரு முறையும் பார்வையிட்டு சுகாதாரமான முறையில் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு,  கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிட்டைசர் உள்ளிட்டவற்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments