அரக்கோணம் அருகே தேர்தல் பகையில் இருவர் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 3339

அரக்கோணம் அருகே தேர்தல் பகையில் இருவர் கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கொல்லப்பட்ட இருவரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் எத்தனை கருத்து மோதல்கள் இருந்தாலும் தேர்தலோடு அவற்றை மறந்து விட்டு அனைவரும் சகோதரர்களாக - சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துக் கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments