தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 22362
வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதால்13-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இதனிடையே, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருநாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments