தந்தைக்கு ஆதரவாக பேசியதால் ஆத்திரம்... 3 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்த தாய்

0 2921

டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையின் போது தந்தையை ஆதரித்ததால் 3 வயது குழந்தையை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு அருகே மல்லதாஹள்ளி பகுதியை சேர்ந்த சேர்ந்த சுதா மற்றும் எரன்னா தம்பதிக்கு 3வயதில் வினுதா என்ற மகள் இருந்துள்ளார். எரன்னா கூலி வேலை செய்து வந்த நிலையில் சுதா டைல்ஸ் கடையில் வேலைப்பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. சுதாவுக்கும், எரன்னாவுக்கும் அடிக்கடி சண்டை வரும் போது எல்லாம் குழந்தை வினுதா சுதாவுக்கு எதிராகவும், தந்தை எரன்னாவுக்கும் ஆதரவாகவும் பேசி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தினமும் வீட்டில் நடந்தவற்றை எல்லாம் இரவு வேலை முடிந்து வரும் தந்தையிடம் ஒன்று விடாமல் கூறுவதை குழந்தை வினுதா வழக்கமாக கொண்டுள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே மேலும் சண்டை மூள்வதால் குழந்தை மீது சுதா வெறுப்பை வளர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மத்திய உணவு இடை வேளையில் வீட்டிற்கு வந்த எரன்னா டிவியில் நியூஸ் சேனலை பார்த்துள்ளார். அதனால் ஆத்திரமுற்ற சுதா நியூஸ் சேனல் பார்க்க வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தந்தைக்கு அருகில் இருந்த குழந்தை வினுதா, சுதாவை அமைதியாக இருக்கும்படியும் தந்தையை டிவி பார்க்க விடும்படி விளையாட்டாய் கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமுற்ற சுதா, கணவன் எரன்னா வேலைக்கு சென்றதும் ஆளில்லா இடத்திற்கு குழந்தையை தூக்கி சென்றுள்ளார்.

அங்கு தனக்கும், கணவனுக்கும் இடையில் இடையூறாக இருக்கும் குழந்தையை கொல்ல திட்டமிட்டு தனது துப்பட்டாவால் அதன் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டு வீட்டிற்கு வந்து குழந்தை காணவில்லை என கணவனிடம் தெரிவித்துள்ளார். போலீசாரிடம் புகார் அளிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குழந்தையை கடைசியாக எங்கு பார்த்தீர்கள் என சுதாவிடம் போலீசார் கேள்விக்கேட்க முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த சுதாவின் மீது போலீசார் சந்தேகத்தினர். அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் அந்த கொடூரத்தை சுதா கூறினாள். கணவர் மீது அதிக குழந்தை பாசம் வைத்திருந்ததாலும், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட குழந்தை காரணமாக இருந்ததாலும் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்தாக கூறினாள்.

இதையடுத்து குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் சுதாவை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments