தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை - நீதிபதி அமர்வு

0 3477
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாததால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை எனக்கூறி, அவரது நியமனத்திற்கு தடை விதித்தனர்.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய பணியாளர் துறை மற்றும் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments