கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு: வியாபாரிகள் போராட்டம்

0 1353

நாளை முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக தமிழக அரசு பல்வேறு கட்டுபாட்டுகளை விதித்துள்ளது. அதன்படி கோயம்பேட்டில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதித்துள்ளதால், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே இன்று பிற்பகலில் சி.எம்.டி.ஏ நிர்வாக செயலாளருடன் கோயம்பேடு முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் சில்லறை வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments