மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியப் படையினர் பற்றிப் பேசியது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் படையினர் பெண்களைத் தாக்கினால், அகப்பையாலும் கத்தியாலும் அவர்களைத் திருப்பித் தாக்கலாம் என்றும், அது பெண்களின் உரிமை என்றும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.
மத்தியப் படையினரைத் தாக்கும்படி பெண்களை மம்தா பானர்ஜி தூண்டி விடுவதாகக் கருதிய தேர்தல் ஆணையம் இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இரண்டாவது முறையாக மீண்டும் அனுப்பியுள்ள நோட்டீசில் நாளை பகல் 11 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
Comments