புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

0 745
புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதுச்சேரியிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை துணநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து வகை திரையரங்குகளிலும் 50 விழுக்காடு பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் மட்டுமே பயணிக்கலாம், பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை, அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments