மீண்டும் 35 ஆயிரம் ரூபாயை தாண்டியது தங்கம் விலை..!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 35ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 35ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.
சில நாட்களுக்கு முன் 33ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனையான சவரன் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் ஆயிரத்து 800 ரூபாய் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கிராம் தங்கம் 22 ரூபாய் உயர்ந்து 4ஆயிரத்து387 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 176 ரூபாய் உயர்ந்து 35ஆயிரத்து096 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து 72ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments