சென்னையில் நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கம்

0 2695

சென்னையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றிப் பயணித்திட ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாகப் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும், நின்று கொண்டு பயணிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 44 இருக்கைகள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் பொதுமக்கள் சிரமமின்றிப் பயணிக்க ஏதுவாக, நாளை முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் பயணிக்கின்ற பகுதிகளிலிருந்து காலை மற்றும் மாலை நெரிசல் நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments