நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 780 பேர் உயிரிழப்பு

நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், 24 மணி நேர கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விபரங்களை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் படி, கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 780 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 79 ஆயிரத்து 608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை ஒன்பது கோடியே 43 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments