ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொலை..

0 1328
ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த வெவ்வேறு தேடுதல் வேட்டைகளில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த வெவ்வேறு தேடுதல் வேட்டைகளில் பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவந்திப்புரா அருகே டிரால் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை ஐஜி தெரிவித்துள்ளார்.

இதேபோல் சோபியன் மாவட்டத்தில் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே 12 மணி நேரத்துக்கு மேல் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதிகள் 5 பேர் உயிரிழந்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments