அமெரிக்காவில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் கவலைக்கிடம் என தகவல்

0 1646
அமெரிக்காவில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: ஒருவர் உயிரிழப்பு, 5 பேர் கவலைக்கிடம் என தகவல்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண நகரான பைரனில் துப்பாக்கியுடன் சரமாரியாக பலரை சுட்டுத் தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மத்திய டெக்ஸாஸ் பகுதியில் உள்ள தொழில்பூங்காவில் நடைபெற்ற  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.புதன்கிழமையன்று கரோலினாவில் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவர் மருத்துவர் மற்றும் தமது குடும்பத்தினர் உட்பட 6 பேரை சுட்டுக் கொன்ற பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments