நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்படாத மாவட்ட ஆட்சியருக்கு நூதன தண்டனை விதித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம்

0 2229
நீதிமன்ற உத்தரவை ஏற்று செயல்படாத மாவட்ட ஆட்சியருக்கு நூதன தண்டனை விதித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளான மாவட்ட ஆட்சியருக்கு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரி ஏற்று செயல்படாததை அடுத்து அவர்கள் மீது  நீதிமன்ற அவமதிப்பு சட்டம் தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஜே.பாட்டில், 6 மாதங்களுக்கு வார இறுதி நாட்களில் 2 மணி நேரம் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதே போல, ஆதரவற்றோர் இல்லத்தில் அனைவருக்கும் 2 நாளைக்கு உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அதிகாரி சந்தியா ராணிக்கு உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments