11ந் தேதி முதல் 14ந் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த பிரதமர் மோடி வலியுறுத்தல்

0 1777
அதிகரிக்கும் கொரோனா : மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் ஆலோசனை

கொரோனா பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாநில முதலமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். வரும் 11 ம் தேதி முதல் 14ம் தேதி வரை தடுப்பூசி முகாம்களை நடத்தவும் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் சூழலில் பாதிப்பு அதிகமுடைய தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா,பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு அவர் மாநில அரசுகளிடம் வலியுறுத்தினார்.

நாடு தழுவிய ஊரடங்கு தேவையில்லை என்று கூறிய மோடி, அவசியமானால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் அதனை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையாக மக்களிடம் விழிப்பை ஏற்படுத்துமாறும் தெரிவித்தார். தொற்று பாதித்த நபர் தொடர்பு கொண்ட 30 பேரையாவது பரிசோதனை செய்யுமாறும் தடுப்பூசியை விடவும் பரிசோதனைகளில் அதிக கவனம் செலுத்துமாறும் மோடி கேட்டுக் கொண்டார்.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நூறு சதவீத இலக்கை குறிவைத்து துரிதப்படுத்துமாறும் மோடி கேட்டுக் கொண்டார். வரும் 11ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை தடுப்பூசி முகாம்களை நடத்துமாறும் மாநில அரசுகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments