14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்

0 3024

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் மைதானத்தில் ரசிகர்கள் இன்றி இப்போட்டி நடத்தப்படுகிறது.

சென்னையில் இன்று இரவு 7 முப்பது மணிக்கு தொடங்கும் முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

பட்டம் வென்ற 5 மாதங்களிலே அடுத்த தொடரில் களமிறங்கி உள்ள மும்பை அணிக்கு முக்கிய வீரர் குயிண்டன் டி காக் தனிமைப்படுத்துதலில் இருப்பது கூடுதல் பின்னடைவை தந்து உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments