சிறையில் அதிகாரிகள் சித்தரவதை செய்வதாக கூறி நீதிபதி முன்னே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட கைதி

சிறையில் அதிகாரிகள் சித்தரவதை செய்வதாக கூறி ஆயுள் தண்டனை கைதி ஒருவர் நீதிபதி முன்னே கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ளார். இந்த நிலையில் வேறு ஒரு வழக்கு விசாரணைக்காக சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பு இன்று ஆஜர்படுத்தபட்டபோது அவர் கழுத்தை அறுத்துக் கொண்டார்.
அவரை சிகிச்சைக்காக காவல்துறையினர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Comments