தெலுங்கானாவில் லஞ்சப் பணம் ரூ.5 லட்சத்தை தீயிட்டு கொளுத்திய தாசில்தார் கைது

தெலுங்கானாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்து லஞ்சப் பணம் 5 லட்ச ரூபாயை தீயிட்டு கொளுத்திய தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானாவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை அறிந்து லஞ்சப் பணம் 5 லட்ச ரூபாயை தீயிட்டு கொளுத்திய தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
நாகர் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த தாசில்தார் வெங்கட கவுடு, குவாரி அனுமதி வழங்க 6 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் .இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கொடுத்த 5 லட்ச ரூபாய் ரசாயனம் தடவிய நோட்டுகளை தாசில்தார் வீட்டுக்கு சென்று அவர் கொடுத்துள்ளார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வருவதை கண்ட தாசில்தார் வெங்கட கவுடு, உடனடியாக சமையலறைக்கு சென்று லஞ்சப்பணம் முழுவதையும் தீவைத்து எரிக்க முயன்றுள்ளார்.
பாதி எரிந்த நிலையில் உள்ள பணத்தை கைப்பற்றிய போலீசார், வெங்கட கவுடுவை கைது செய்தனர். அவரை அழைத்து வரும் போது பொது மக்களும் தாக்க முயன்றனர்.
Comments