தங்க புதையலுக்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி ஏற்றி வழிபாடு... இளைஞருக்கு சாமி வந்ததால் பரபரப்பு!

0 3183

தெலங்கானா மாநிலத்தில் நிலத்தை தோண்டியபோது கிடைத்த 5 கிலோ தங்க புதையலுக்கு ஊதுபத்தி ஏற்றீவைத்து , தேங்காய் உடைத்து வழிப்பட்டனர். அப்போது ஊர்காரர் ஒருவருக்கு சாமி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டத்தில் உள்ளது பெம்பர்த்தி கிராமம். இக்கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலத்தை நரசிம்ஹா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி பூமி பூஜை நடத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது.

அப்போது பழைய செம்பு குடம் ஒன்றில் சுமார் ஐந்து கிலோ எடையுடைய தங்க ஆபரணங்கள் புதையலாக கிடைத்துள்ளது.

இந்த புதையலை பார்த்த கிராம வாசி ஒருவர், அதற்கு சூடம் ஏற்றி, ஊதுபத்தி ஏற்றீ வைத்து, தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினார். பின்னர் அந்த பழைய செம்பு குடத்தை கையில் எடுத்தவுடன் , சாமி வந்து சிரித்தது அருகில் இருந்தவர்களை பீதி அடைய செய்தது.

இதுபற்றி ரியல் எஸ்டேட் அதிபர் நரசிம்ஹா அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் , புதையலை கைப்பற்றினர்.

காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின் போது பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தற்போது புதையலாக வெளிப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதையலைப்பார்த்து இளைஞருக்கு சாமி வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments