சென்னை கோயம்பேடு அருகே தந்தை கண்முன்னே மகன் வெட்டிக்கொலை

0 2056

சென்னை கோயம்பேடு அருகே தந்தை கண் முன்னே இளைஞரை விரட்டி வெட்டிக் கொலை செய்த கும்பலைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெற்குன்றம் சக்தி நகரைச் சேர்ந்த பிரம்மதேவனும், அவரது மகன் 23 வயதான நாராயணனும், புதன்கிழமை வெளியில் சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டோவில் வந்த 7 பேர் கும்பல் சுற்றிவளைத்து தந்தை கண் முன்னே, நாராயணனை வெட்டிக் கொன்றதாக சொல்லப்படுகிறது.

கோயம்பேடு போலீசாரின் விசாரணையில், கொலையான நபர், அதே பகுதியைச் சேர்ந்த தனஞ்செயன் என்பவரை கொலை செய்ய முயற்சித்ததால் ஏற்பட்ட முன்விரோதமே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்ட நாராயணன், சகோதரர் பிறந்தநாளுக்காக நெற்குன்றத்திற்கு வந்தபோது, எதிர்தரப்பு கூலிப்படையை ஏவி வெட்டிக்கொன்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments