ஆட்டோவை ஆட்டையப்போட்ட மர்ம நபர்.. காட்டிகொடுத்த SMS... சேஸ் செய்து மீட்ட உரிமையாளர்!

0 2851

போரூர் சுங்கச்சாவடி அருகே லோடு ஆட்டோவை திருடிச்சென்ற நபரை மறைமலை நகர் பகுதியில் சேஸ் செய்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெசப்பாக்கம், ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் துரை. இவர் சொந்தமாக லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இரவு நேரங்களில் தனது ஆட்டோவை போரூரில் நிறுத்திவிட்டு, வீட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு துரை தனது வாகனத்தை போரூரில் நிறுத்திவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவில் தனது வாகனம் போரூர் சுங்கச்சாவடியை கடந்து சென்றது போல் பாஸ் டாக் ஆப்பிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதனையடுத்து பதறி அடித்துக்கொண்டு துரை தனது உறவினருடன் லோடு ஆட்டோ நிறுத்திவைத்திருக்கும் இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது லோடு ஆட்டோ அங்கு இல்லை என்றும் ஆட்டோவை யாரோ ஆட்டையப்போட்டதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, செங்கல்பட்டு சுங்கச்சாவடியை நோக்கி ஆட்டோ செல்வதை அறிந்து, செங்கல் பட்டு நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மறைமலை நகர் பகுதியில் தனது வாகனத்தை ஓட்டி சென்ற நபரை மடக்கி பிடித்து, அவரை போரூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருப்பூரை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் வேணுகோபால் மீது ஏற்கனவே லோடு கணக்கில் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வேனுவை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments