தமிழ்நாட்டில் இன்று 4276 பேருக்கு கொரோனா.. 19 பேர் உயிரிழப்பு...!

0 3295
தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,276 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,276 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில், 1,869 பேர் குணமடைந்து உள்ளனர். திருவள்ளூரில் 95 வயது மூதாட்டி, சென்னையில் 91 வயது முதியவர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

சென்னை மாநகரில் ஆயிரத்து 520 பேர் பாதிக்கப்பட, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 427 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 398 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுதவிர, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர் உள்பட 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக
தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments