சென்னையில் ஏ.சி. எந்திரம் வெடித்துச் சிதறியதில் இளைஞர் காயம்

சென்னை எண்ணூர் அருகே ஏசி எந்திரம் வெடித்த விபத்தில் இளைஞர் காயமடைந்தார்.
சென்னை எண்ணூர் அருகே ஏசி எந்திரம் வெடித்த விபத்தில் இளைஞர் காயமடைந்தார்.
விம்கோ நகர் சக்திபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி. எந்திரம் திடீரென வெடித்துச்சிதறியது. அந்த எந்திரத்தில் பொருத்தப்பட்ட சிலிண்டரிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டு, வெடித்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் ஏசி எந்திரத்தின் அடியில் தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டனுக்கு காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments