கொரோனா மாநில அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா தொற்று பரவல், மாநில அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல், மாநில அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தொடக்க கல்வியியல் பட்டயப்படிப்பு தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி தடை பட்டதாக வாதிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், நடந்து முடிந்த தேர்வில் 98 புள்ளி 5 சதவீதம் பேர், தோல்வி அடைந்ததாக சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட
நீதிபதிகள், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சியின் மாநில கவுன்சில் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை வருகிற 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments