பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடுமா?.... நடிகர்களை விளாசும் இயக்குனர்!

0 2612

பரதநாட்டியத்தின் சிறப்பை விளக்கும் வகையில், குமார சம்பவம் என்கிற திரைப்படத்தை சாய் ஸ்ரீ ராம் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய படத்தின் நடிகரும் இயக்குனருமான சாய் ஸ்ரீ ராம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள். பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்கிற தவறான விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிருப்பதாக தெரிவித்தார்.

அஜித் நடித்த 'வரலாறு' படத்தில் பரதம் கற்றுக்கொண்டதால் அஜித்துக்கு திருமணம் ஆகவில்லை என்பதாக காட்டப்படும். அதே போல 'விஸ்வரூபம்' படத்திலும் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால் அவரின் மனைவி வெறுப்பதாக காட்சி அமைக்கபட்டிருக்கும்.

பரதம் என்பது புனிதமானது. அதனை சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் இழைத்துவிட்டார்கள் என தெரிவித்தார்.

இது தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக தான், 'குமார சம்பவம்' என்கிற படத்தை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது. அதுதான் என்னுடைய நோக்கம் என தெரிவித்தார். இப் படத்தில் தன்னுடன் நிகிதா மேனன், சாய் அக் ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருப்பதாகவும், படம் விரைவில் வெளியாகும் என்றும் ஸ்ரீராம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments