காதலிக்கு ஐபோன் வாங்கி தருவதற்காக பெண்ணிடம் நகையை பறித்த காதலன் கைது

தூத்துக்குடியில் காதலிக்கு ஐபோன் வாங்கி தருவதற்காக பெண்ணிடம் நகையை பறித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
ரோச் காலனியைச் சேர்ந்த ஆஷா என்பவர் அணிந்திருந்த 17 சவரன் தங்கச் செயினை, பைக்கில் வந்த மர்மநபர்,கடந்த பிப்ரவரி மாதம் பறித்துச் சென்றார்.
புகாரின் பேரில்,அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், வழிப்பறிக்கு கேடிஎம் பைக்கின் புதிய மாடலை திருடன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு பகுதியில் வந்த இளைஞன் போலீசாரைக் கண்டதும் தப்பிச்செல்ல முயன்றபோது, அவனை மடக்கி விசாரித்ததில், தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த நயினார் என்பதும்,ஆஷாவின் செயினை பறித்தவன் என்பதும் தெரியவந்ததால் கைது செய்தனர்.
Comments