நடிகை நக்மாவுக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி

0 2759
திரைப்பட நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திரைப்பட நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 2ஆம் தேதியன்று முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து, தனது வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக டிவிட்டரில் நக்மா தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் தவணை தடுப்பூசி போட்டுவிட்டோம் என அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும் நக்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments