15 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.... 1 லட்ச ரூபாய் நிதி உதவி அளித்த வியாபாரிகள் சங்கத்தினர்!

0 802

தூத்துக்குடியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர் 1 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த கிங்ஸ்டன் எனும் கூலித் தொழிலாளியின் மகள் ஞான அனுஷா. இவர் அதேப்பகுதியில் உள்ள பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் . இவருக்கு ஏற்கனவே ஒரு முறை சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மற்றொரு சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமிக்கு அவரின் தாயார் சிறுநீரக தானம் செய்ய முன்வந்துள்ளார்.
இருப்பினும், அறுவை சிகிச்சைக்கு 3 லட்சத்திற்கும் மேலாக செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் , சிறுமியின் தந்தை கிங்ஸ்டன் தனது மகளை காப்பாற்ற போராடி வந்துள்ளார்.

இந்தநிலையில், சிறுமியின் நிலைப்பற்றி அறிந்த தூத்துக்குடி நகர பர்னிச்சர் வியாபாரிகள் சங்கத்தினர், தாமாக முன்வந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்து உதவியுள்ளனர். இந்தநிலையில் மீண்டும் அனைத்து வியாபாரிகளும் சேர்ந்து நிதி திரட்டி, முதற்கட்டமாக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமாரிடம் வழங்கினர். எஸ்.பி ஜெயக்குமார், காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி நகர பர்னிச்சர் வியாபாரிகள் சிறுமியின் நிலையறிந்து தாமாக முன்வந்து, நிதி உதவி அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments