தமிழகத்தில் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என கண்டறிய 20 பேரின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பு

0 2252
தமிழகத்தில் மாறுபட்டகொரோனா வைரஸ் பரவி உள்ளதா என கண்டறிய பரிசோதனை

தமிழகத்தில் இரட்டை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதை கண்டறிய, நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 20 பேரின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளன.

அண்மையில், மகராஷ்டிராவில் இரட்டை உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ், ஏற்கெனவே தொற்று பாதித்த மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இரட்டை உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்படுகிறது. அதன்படி, தொற்று பாதிக்கப்பட்ட 20 பேரின் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை பரிசோதனை செய்ய 10 லட்சம் ரூபாய் செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments