அனைத்து திரையரங்குகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி - தமிழக அரசு

0 2168
அனைத்து திரையரங்குகளிலும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, வருகிற 10 ஆம் தேதி முதல் கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்று கூறப்பட்டுள்ளது. உள் அரங்குகளில் அதிகபட்சமாக 200 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் நடத்த அனுமதிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், வரும் 10 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்றும், நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கும் அதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஜுலையில் அமல்படுத்தப்பட்டதைப் போல் வாடகை ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர்த்து இரு பயணிகளும், டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க தொடர்ந்து இ பதிவு முறை செயல்படுத்தப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments