உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டும் பயன்படுத்த அனுமதி

0 3271

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு, கடைகளுக்கும் வரும் 10 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன.

முகக் கவசம் அணிவது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள், ஷோரூம்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

உணவகங்கள், தேநீர்க் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும்.உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments