தர்மபுரி காட்டுப்பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை... முதுமலையில் விடுவிப்பு!

0 974

தர்மபுரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 20வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள பதனவாடி காப்புக்காடு பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று கடந்த இரண்டு வாரங்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் யானையால் பொதுமக்களுக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் காட்டுக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விட வனத்துறை திட்டமிட்டது. தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்டனர்.

யானையை அடையாளம் கண்டபின், மயக்க ஊசிசெலுத்தி பிடித்த வனத்துறையினர், தொடர்ந்து பிரத்யேக லாரியில் கிரேன் உதவியுடன் யானையை ஏற்றினர்.

இந்த சூழலில் லாரியில் ஏற்றப்பட்ட யானையை முதுமலையில் விடுவிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது. இந்தநிலையில், தர்மபுரியில் இருந்து கோத்தகிரி வழியாக, யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, அதிகாலை நேரத்தில் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments