கோடைகாலத்தில் மக்களின் தாகம் தணிக்க தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்திட தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

0 1165
மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட 'ஒன்றிணைவோம் வா'ருங்கள் என தொண்டர்களுக்கு அழைப்பு

மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள் எனத் திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு ஒன்றிணைவோம் வா எனும் செயல்பாட்டின் மூலம் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் உணவு மருத்துவ உதவிகளைச் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோடைக்காலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க. சார்பில் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி முகக்கவசம், சானிடைசர், கபசுரக் குடிநீர் வழங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் முடிவு வரும்வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போலத் தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments