சென்னையில் இன்று முதல் வீடு வீடாக கொரோனா பரிசோதனை..

கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் இன்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், சென்னையில் இன்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னையில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1,300-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனையில் யாருக்கேனும் காய்ச்சல் அறிகுறி இருந்தால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யயப்படும். சென்னையில் உள்ள 200 வார்டுகளில் புதன்கிழமை மட்டும் சுமார் 230 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments