அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்

0 2698
அண்ணாத்த படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

அண்ணாத்த படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த டிசம்பர் மாதம் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அண்ணாத்த படபிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனிடையே, ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, நடிகர் ரஜினியும் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 நாள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதைத்தொடர்ந்து தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார்.

இந்த நிலையில், உடல் நலம் தேறியதை அடுத்து, கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அண்ணாத்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அடுத்தகட்ட படபிடிப்புக்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து அங்கு 3 வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments