துரைமுருகனுக்கு கொரோனா உறுதி..!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் முதுமை, உடல்நலக்குறைவு காரணமாக அவ்வப்போது தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்த நிலையில் இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தேர்தல் முடிந்த நிலையில் அவருக்கு உடல் சோர்வு, இருமல், சளி ஆகிய அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் துரைமுருகன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாமா? என்பது பற்றி மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
Comments