மகள் மீது அதீத பாசம்... பாசக்கார தந்தை கொலையாளியான சோகம்!

0 5983
மஞ்சு, புலவேந்திரன், செல்வம்

நெல்லை அருகே மகள் மற்றும் மருமகனை வெட்டி படுகொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

நெல்லைமாவட்டம்பாப்பாக்குடி அருகேயுள்ள நத்தன்தட்டைகிராமத்தை சேர்ந்தவர் புலவேந்திரன் . கூலி தொழிலாளியான இவருக்கு மஞ்சு என்ற மகள் உண்டு. மஞ்சுவை செல்வம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளன.  செல்வம் சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதனால், மகள் மஞ்சு குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். 

இதனால், மாமனார் புலவேந்திரன் தன் வீட்டுக்கு மகள் குடும்பத்தை அழைத்து வந்து தங் க வைத்துள்ளார். இந்த நிலையில், செல்வத்தின் குழந்தை சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, செல்வம் தன் மாமனாரிடத்தில் குழந்தையை ரோட்டில் ஏன் விளையாட வைத்தீர்கள் என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால், அவர்களிடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கடும் கோபமடைந்த புலவேந்திரன் அரிவாளை கொண்டு, செல்வத்தை வெட்டியுள்ளார்.

இதை பார்த்த மஞ்சு கணவரை தந்தை வெட்டுவதை தடுக்க முயன்றுள்ளார். அரிவாள் வெட்டு மஞ்சு மீதும் பட்டுள்ளது இதில், சம்பவ இடத்திலேயே செல்வமும் மஞ்சுவும் இறந்து போனார்கள். பின்னர், புலவேந்திரன் பாப்பாகுடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பாப்பாக்குடி போலீஸார் இருவரின் உடல்களையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வத்துக்கும் மஞ்சுவுக்கும் திருமணம் நடந்து 9 வருடங்கள் ஆகிறது. புலவேந்திரன் பேரக் குழந்தைகள் மீது அதிக அளவு கடந்த பாசம் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், மருமகன் ஊதாரித்தனமாக சுற்றி வந்த ஆத்திரத்தில் கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments