ஒலிம்பிக் துடுப்புப் போட்டிக்குத் தகுதி பெற்றார் சென்னை வீராங்கனை நேத்ரா குமணன்...

0 2027
ஆசிய தகுதி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய துடுப்பு போட்டி வீராங்கனை என்ற அரிய பெருமைக்கு நேத்ரா குமணன் சொந்தக்காரர் ஆனார்.

ஆசிய தகுதி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய துடுப்பு போட்டி வீராங்கனை என்ற அரிய பெருமைக்கு நேத்ரா குமணன் சொந்தக்காரர் ஆனார்.

சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் ஓமனில் நடந்த ஆசிய தகுதி சுற்று துடுப்பு போட்டியின் லேசர் ரேடியல் பிரிவில் வென்று 21 தரவரிசை புள்ளிகள் பெற்றார்.

தரவரிசையில் முன்னிலை பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்கு முன் இந்திய தரப்பில் 9 துடுப்பு வீரர்கள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்று இருந்த நிலையில் முதல் முறையாக நேத்ரா குமணன் தேர்வாகி அரிய சாதனை படைத்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments