மத்தியப் பிரதேசத்தில் முகக்கவசம் அணியாத 258 பேர் சிறையில் அடைப்பு

மத்தியப் பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 258 பேர் தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 258 பேர் தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர்.
அம்மாநிலத்தில் உள்ள இந்தூர் கொரோனா தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இதனால் அங்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுஇடத்தில் முகக்கவசம் அணியாத 258 பேரை பிடித்த போலீசார், சினேலதகஞ்ச் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வாறு அடைக்கப்படுபவர்கள் 3 மணி நேரத்திற்குப் பின்னரே விடுவிக்கப்படுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
Comments