சத்தீஸ்கரில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கமாண்டோ வீரர் புகைப்படத்தை வெளியிட்டது மாவோயிஸ்ட்

0 2110
சத்தீஸ்கரில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கமாண்டோ வீரர் புகைப்படத்தை மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கமாண்டோ வீரர் புகைப்படத்தை மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 3ம் தேதி பீஜப்பூர் மாவட்ட எல்லையில் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதில் கோப்ரோ படைப் பிரிவின் கமாண்டோ வீரர் ராகேஷ்வர் சிங் என்பவரைக் கடத்திச் சென்றனர். இந்நிலையில் ராகேஷ்வர் பனை ஓலையால் வேயப்பட்ட ஓரிடத்தில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை மாவோயிஸ்ட்டுகள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ராகேஷ்வரை விடுவிக்க அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments