திருநங்கைகளை கிண்டல் செய்த நபர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொலை

மயிலாடுதுறையில் திருநங்கைகளை கிண்டல் செய்த நபர், 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ஐயப்பன் என்ற அந்த நபர், குடிபோதையில் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளை ஆபாசமாகப் பேசி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் திருநங்கைகள் புகார் தெரிவித்துள்ளனர். திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனைக் கண்டிக்கச் சென்ற அந்த இளைஞர்கள், அவரை சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பினர். 5 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் திருநங்கைகளை கிண்டல் செய்த நபர், 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த ஐயப்பன் என்ற அந்த நபர், குடிபோதையில் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளை ஆபாசமாகப் பேசி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரிடம் திருநங்கைகள் புகார் தெரிவித்துள்ளனர். திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனைக் கண்டிக்கச் சென்ற அந்த இளைஞர்கள், அவரை சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தப்பினர். 5 பேர் கொண்ட அந்த கும்பலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments