மகாராஷ்ட்ராவில் புதிய உச்சத்தைத் தொட்டது கொரோனா பாதிப்பு

மகாராஷ்ட்ராவில் புதிய உச்சத்தைத் தொட்டது கொரோனா பாதிப்பு.
மகாராஷ்ட்ராவில் புதிய உச்சத்தைத் தொட்டது கொரோனா பாதிப்பு. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சைப் பெறுகின்றனர். இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் 322 பேர் உயிரிழந்த நிலையில் மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக மகாராஷ்ட்ரா அரசு கூறியதற்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தேவையான அளவுக்கு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்த ஹர்ஷ் வரதன் மகாராஷ்ட்ரா அரசு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை உரிய முறையில் பயன்படுத்தாமல் அதிகளவிலான கொரோனா பாதிப்புகளுடன் நாட்டை பதற்றத்துக்கு ஆளாக்கி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments