பட்டப்பகலில் பெண்ணிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகள் கொண்ட பை பறிப்பு

0 1461
டெல்லி அடுத்த குருகிராமில் பட்டப்பகலில் ஒரு பெண்ணிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

டெல்லி அடுத்த குருகிராமில் பட்டப்பகலில் ஒரு பெண்ணிடமிருந்து பத்து லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றனர்.

இதன் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் திருடர்களைத் தேடி வருகின்றனர். ஷிவ் நகர் காவனியில் மாலை நேரத்தில் பொற்கொல்லரிடம் கொடுத்த நகைகளை வாங்கி வந்த பெண் ஸ்கூட்டியில் தமது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு பேர் அந்தப் பெண்ணிடம் பையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளின் எந்தத் தடயமும் அங்கு கிடைக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments