100 பேருக்கு மேல் பணியாற்றும் இடங்களிலேயே கொரோனா தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு... மத்திய அரசு அறிவிப்பு...

0 2530
அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏப்ரல் 11ம் தேதிக்குள் இதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.

குறைந்தது 100 ஊழியர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் தடுப்பூசி போடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் ஊசி போடப்படும் என்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டல் பின்பற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments