இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம்

0 1393
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் மீண்டும் முகேஷ் அம்பானி முதலிடம் பெற்றுள்ளார்.

2-வது இடத்தில் கவுதம் அதானி இருக்கிறார். 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீசுவரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுடன் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் 3 ஆம் இடத்திலும், அவென்யூ சூப்பர்மார்க்கெட் அதிபர் ராதாகிஷண் தமானி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.

கோடக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோடக் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடன் 5 ஆம் இடத்திலும் உள்ளார்.
தொடர்ந்து லட்சுமி மிட்டல்,குமார் பிர்லா, சைரஸ் பூனவல்லா,திலீப் ஷாங்க்வி,சுனில் மிட்டல் & குடும்பம் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments