ஏசி, எல்இடி, சோலார் பேனல் செல்கள் தயாரிப்புக்கு ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு முடிவு

0 1736

ஏசி, எல்இடி விளக்குகள், சோலார் பேனலில் உள்ள போட்டோவோல்டைக் செல்கள் உள்ளிட்டவை தயாரிப்புக்கு, ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், தயாரிப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 9 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் 4 திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து இத்தகைய பொருட்களின் இறக்குமதியை குறைப்பதுடன், தற்சார்பு இந்தியா மற்றும் உற்பத்தி துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பியூஷ் கோயல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments