முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், முக கவசம் சரியாக அணியாத ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய இரண்டு போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரோஸ் காந்தி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக கிருஷ்ணா கேயர் என்ற ஆட்டோ ஓட்டுனர் வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த முக கவசம் மூக்கிற்கு கீழே கழன்று இருந்ததை கண்ட இரு போலீசார், கிருஷ்ணாவை காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதற்கு கிருஷ்ணா மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனை அங்கிருந்த சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த காட்சி வைரலானதையடுத்து, இரண்டு போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Comments